உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவரை ஜாதி குறிப்பிட்டு பேசியதை கண்டித்து மறியல்

மாணவரை ஜாதி குறிப்பிட்டு பேசியதை கண்டித்து மறியல்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பறையப்பட்டி புதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளையின் போது, ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவர் சாப்பிட்டு விட்டு கைகழுவிய தண்ணீர், அங்கிருந்த குடத்தில் விழுந்துள்ளது. இதை பள்ளிக்கு அருகில் வசிக்கும் பெண் கவனித்து, மாணவனை தாக்கி உள்ளார். அப்பெண் மீது நடவடிக்கை எடுக்கவும், மாணவனை ஜாதியை குறிப்பிட்டு பேசியதாக தலைமையாசிரியர், அறிவியல் ஆசிரியர் ஆகியோரை பணியிட மாற்றம் செய்யவும் வலியுறுத்தி, மாணவனின் பெற்றோர், வி.சி., கட்சியினர், பள்ளி முன் மறியலில் ஈடுபட்டனர்.அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி தலைமையிலான அதிகாரிகள் பேச்சு நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.இதற்கிடையே, தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி, அறிவியல் ஆசிரியர் கிருஷ்ணன் ஆகியோரை, மாவட்ட கல்வி அலுவலர் சின்னமாது பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ