பந்தய புறா போட்டி: சேலம் வாலிபருக்கு பரிசு
சேலம்: சேலம் பந்தய புறா வளர்ப்போர் சங்கம் சார்பில், 2023 - 24க்கான பந்தய புறா போட்டி, கடந்த டிசம்பரில் தொடங்கி, 2024 ஏப்ரலில் நிறைவு பெற்றது. உத்தரபிரதேசத்தில் தொடங்கிய இப்போட்டியில், 50க்கும் மேற்பட்ட புறா வளர்ப்போர், புறாக்-களை பறக்கவிட்டனர். 210, 350, 470, 550, 750, 1,000, 1,500 கி.மீ., முறையே, 6 பிரிவுகளாக நடந்தது. இதில் சேலத்தை சேர்ந்த சக்தி என்பவரது, 1 வயது புறா, 12 நாட்களில் 1,500 கி.மீ., கடந்து, சேலம் வந்து முதலிடம் பிடித்-தது. இதன் பரிசளிப்பு விழா, சேலம், அஸ்தம்பட்டியில் நேற்று நடந்தது. தலைவர் தன்சிங் தலைமை வகித்தார். அதில் புதுச்சேரி அரசு கொறடா ஆறுமுகம், சேலம் சக்திக்கு, 2023-24க்கான சாம்-பியன் பட்டத்தை வழங்கினார். தொடர்ந்து, 2023க்கு ஒட்டு-மொத்த சாம்பியன் பட்டத்தை, ராசிபுரம் அபுதாகீர், 2024க்கு ஒட்-டுமொத்த சாம்பியன் பட்டத்தை சேலம் முகுந்தன் அருளுக்கு வழங்கினார்.