உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவையில் வழித்தட பராமரிப்பு சேலம் வழி ரயில்களில் மாற்றம்

கோவையில் வழித்தட பராமரிப்பு சேலம் வழி ரயில்களில் மாற்றம்

சேலம்:கோவையில் வழித்தட பராமரிப்பு பணி நடப்பதால், சேலம் வழி ரயில்கள், மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளன.சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை ஜங்ஷனில் ரயில் வழித்தட பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், ஆக., 8, 10, 13, 15, 17 ஆகிய தேதிகளில், ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை போத்தனுார், இருகூர் வழியே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில்கள் கோவை ஜங்ஷனுக்கு செல்லாது. அதற்கு பதிலாக போத்தனுாரில் நின்று செல்லும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ