உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கல் மீது விழுந்ததில் பள்ளி மாணவர் பலி

கல் மீது விழுந்ததில் பள்ளி மாணவர் பலி

தலைவாசல்:சாலையில் ஓடியபோது, கல் மீது விழுந்ததில் பள்ளி மாணவர் பரிதாபமாக பலியானார்.சேலம் மாவட்டம் தலைவாசல், வெள்ளையூரை சேர்ந்த விவசாயி செல்லப்பிள்ளை, 40. இவரது மகன் கிருபாகரன், 10. அதே ஊரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், 5ம் வகுப்பு படித்தார். நேற்று காலை, 9:00 மணிக்கு பள்ளிக்கு செல்ல வேகமாக ஓடினார். அப்போது சாலையில் கிடந்த கல் மீது விழுந்து மயக்கம் அடைந்தார். அந்த வழியே வந்த தனியார் பள்ளி பஸ்சில், சிறுவனுக்கு முதலுதவி அளித்தனர். பின் அவரது பெற்றோர், கிருபாகரனை, வீரகனுார் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றபோது, அவர் இறந்துவிட்டது தெரிந்தது. வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி