உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆயில் லாரி மீது டேங்கர் லாரி மோதிய விபத்தால் போக்குவரத்து பாதிப்பு

ஆயில் லாரி மீது டேங்கர் லாரி மோதிய விபத்தால் போக்குவரத்து பாதிப்பு

ஆத்துார்: சாலையோரம் நின்றிருந்த, ஆயில் பாக்கெட் ஏற்றி வந்த லாரி மீது, டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானதால், போக்குவ-ரத்து பாதிப்பு ஏற்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், தொட்டியத்தை சேர்ந்த லாரி டிரைவர் சதீஷ்குமார், 40, சென்னையில் இருந்து, சேலம் நோக்கி ஆயில் பாக்கெட்டுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு வந்தார். நேற்று அதிகாலை, 5:00 மணியளவில் ஆத்துார் அருகே, தள-வாய்பட்டி பிரிவு சாலை பகுதியில், லாரியை நிறுத்தியுள்ளார். அப்போது, பின்னால் வந்த, டேங்கர் லாரி, ஆயில் பாக்கெட் ஏற்றி வந்த லாரி மீது மோதியது.இந்த விபத்தில் டிரைவர்கள் சதீஷ்குமார், ஆறுமுகம் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். லாரி கவிழ்ந்ததில் ஆயில் பாக்கெட் உடைந்து, சாலையின் நடுவில் கொட்டியது.இதனால், அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆத்துார் ஊரக போலீசார் மற்றும் ஏத்தாப்பூர் போலீசார், பொக்லைன் இயந்திரம் மூலம் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தினர். ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ