உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் ஆசிரியர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் ஆசிரியர் கைது

சங்ககிரி: பள்ளியில், 2ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.கொங்கணாபுரம் அருகே புதுக்குடியானுாரில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 8 வயது சிறுமி, 2ம் வகுப்பு படிக்கிறார். அச்சிறுமிக்கு நேற்று முன்தினம் மதியம், அதே பள்ளியில் பணிபுரியும் தாரமங்கலத்தை சேர்ந்த பிரான்சிஸ் ஆண்டனி, 54, என்பவர், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமி, அவரது தாயிடம் தெரிவித்துள்ளார். அவர், 'சைல்டு ஹெல்ப் லைன்' மூலம், நேற்று புகார் தெரிவித்தார்.பின் கொங்கணாபுரம் போலீசார், பள்ளியில் சென்று பிரான்சிஸ் ஆண்டனியிடம் விசாரித்தனர். தொடர்ந்து சங்ககிரி மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரித்த மகளிர் போலீஸார், போக்சோ வழக்குப்பதிந்து, பிரான்சிஸ் ஆண்டனியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை