உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டேங்கர் லாரியை நிறுத்தி டிரைவர் தர்ணா

டேங்கர் லாரியை நிறுத்தி டிரைவர் தர்ணா

ஆத்துார் ;கெங்கவல்லி அருகே நடுவலுார், பள்ளக்காட்டை சேர்ந்தவர் வேல்முருகன், 45. இவர், சேலத்தை சேர்ந்த, தனியார் நிறுவ-னத்தில் பால் டேங்கர் லாரி டிரைவராக வேலை செய்தார். ஓராண்-டுக்கு முன் வேலையை விட்டு நின்றார். டிரைவராக பணிபுரிந்த-தற்கு, 2.23 லட்சம் ரூபாய் சம்பள பாக்கி உள்ளதாக, அந்நிறுவ-னத்திடம் தெரிவித்தார். அப்போது, 20,000 மட்டும் வழங்கினர். மீதி தொகையை பலமுறை கேட்டும் வழங்கவில்லை.நேற்று வேல்முருகன், ஆத்துார், அம்மம்பாளையம் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்துக்கு பால் ஏற்ற வந்த லாரியை நிறுத்தி, தர்ணாவில் ஈடுபட்டார். ஆத்துார் ஊரக போலீசார் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், தர்ணாவை கைவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ