உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நெரிசலை சீரமைத்த சுற்றுலா பயணி

நெரிசலை சீரமைத்த சுற்றுலா பயணி

ஏற்காடு : ஏற்காட்டில் மலர் கண்காட்சி முடிந்த நிலையில், தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். குறிப்பாக கார்கள், சுற்றுலா வேன்கள், இருசக்கர வாகனங்கள் வருகின்றனர். இதனால் ஒண்டிக்கடை ரவுண்டானா, அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், படகு இல்ல சாலைகள், மலைப்பாதை ஆகிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுற்றுலா பயணியரின் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து ஊர்ந்தபடி சென்றன.கோடை விழா, மலர் கண்காட்சியின்போது, போக்குவரத்தை சரிசெய்யும் பணியில், போலீசார் ஈடுபட்டிருந்தனர். இரு நாட்களுக்கு முன் மலர் கண்காட்சி முடிந்த நிலையில், பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் திரும்பி சென்றுவிட்டனர். இதனால் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவதிப்பட்டனர்.மதியம் ஒண்டிக்கடை ரவுண்டானாவில் ஏற்பட்ட நெரிசலை, திருவண்ணாமலையை சேர்ந்த சுற்றுலா பயணி பாலச்சந்தர், 1:30 மணி நேரம் போக்குவரத்தை சரி செய்யும் வேலையில் ஈடுபட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ