உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆவின் பால் விலை உயர வாய்ப்பில்லை

ஆவின் பால் விலை உயர வாய்ப்பில்லை

சேலம், நவ. 9-சேலம், சித்தனுாரில் இயங்கும் ஆவின் பால் பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று ஆய்வு செய்தனர். அங்கு, 140 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும், 7 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் பதன ஆலை, பால் பாக்கெட் தயாரிக்கும் ஆலை, 30 டன் பால் பவுடர் தயாரிக்கும் ஆலைகளை பார்வையிட்டனர். அந்த பணிகளை விரைந்து முடிக்க, அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டார்.தொடர்ந்து ராஜகண்ணப்பன், நிருபர்களிடம் கூறுகையில், ''ஆவின் மையங்களில் வேறு பொருட்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் நிறுவனம் சேவை அடிப்படையில் இயங்கி வருவதால் விற்பனை விலையை உயர்த்த வாயப்பில்லை. பால் கொள்முதல் விவசாயிகளுக்கு, 140 கோடி ரூபாய் ஏற்கனவே தமிழக முதல்வர் விடுவித்துள்ளார். தற்போது பால் நுகர்வோரும், உற்பத்தியாளர்களும் சந்தோஷமாக உள்ளனர். தமிழகத்தில், 24 புது ஆலைகள் கொண்டு வரப்பட உள்ளன,'' என்றார். ஆவின் மேலாண் இயக்குனர் வினீத், கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் எம்.பி., செல்வகணபதி, மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள், முன்னாள் எம்.எல்.ஏ., சிவலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ