வ.உ.சி., மார்க்கெட் தவிர வேறு பூ சந்தை வேண்டாம்
சேலம்: சேலம் சின்னக்கடை வீதி, வ.உ.சி., மார்க்கெட் வியாபாரிகள் பலர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியி-ருப்பதாவது:சேலம் வ.உ.சி., மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 14.97 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, புது பொலிவுடன் செயல்ப-டுகிறது. இங்கு தினமும், 12 டன் பூக்கள் விற்பனை நடக்கிறது. அது தவிர மலர் மாலை, வாழை இலை, தேங்காய் பழக் கடைகள், மாலை உபரிபொருட்கள் விற்பனை கடைகளும் உள்-ளன.மேலும், 100க்கும் மேற்பட்ட கடைகள் வைப்பதற்கான போதிய இடவசதி, வ.உ.சி., மார்க்கெட்டில் உள்ளது. ஆனால் சாமந்தி பூ வியாபாரிகள், 16 பேர் சேர்ந்து, விக்டோரியா வளா-கத்தில் இன்னொரு மொத்த பூ சந்தையை உருவாக்க திட்ட-மிட்டு, அங்கு கடை வைக்க, எங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். எனவே, வ.உ.சி., மார்க்கெட் தவிர, சேலம் மாந-கரில் வேறு எங்கும் இன்னொரு பூ சந்தையை உருவாக்கக்கூ-டாது. மக்கள், எந்தவித அச்சமும் இன்றி இந்த மார்க்கெட்-டுக்கு வந்து செல்கின்றனர். நாங்களும், நிம்மதியாக வியாபாரம் செய்து வருகிறோம். அதனால் சகல வசதிகளுடன், சின்னக்கடை வீதியில் இயங்கும் வ.உ.சி., மார்க்கெட் ஒன்றே போதுமானது.இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.