மின்சாரம் பாய்ந்து பெண் பலி
சேலம்: சேலம், சின்ன திருப்பதி அம்மன் நகரை சேர்ந்த கவுதமன் மனைவி ராதா, 23. நேற்று காலை வீட்டில் மின்விசிறி சுவிட்சை போட்டார். அப்போது மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டு மயக்கம் அடைந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் இறந்தது தெரிய-வந்தது. கன்னங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.