உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 10 ஏக்கர் தரிசு நிலம் தேர்வு

வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 10 ஏக்கர் தரிசு நிலம் தேர்வு

மேட்டூர், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், 2025 - 26ல், கொளத்துார் வட்டாரம் கோல்நாயக்கன்பட்டி ஊராட்சி, ரெட்டியூர் காட்டுவளவில், 12 பயனாளிகளின், 10 ஏக்கர் தரிசு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த நிலங்களில் வளர்ந்த புல், பூண்டுகளை அகற்றி, உழுது சாகுபடி பணி மேற்கொள்ள ஆயத்தப்படுத்தும் விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு, 3,700 ரூபாய், வேளாண் துறை சார்பில் மானியம் வழங்கப்படும். தொடர்ந்து தோட்டக்கலை துறை சார்பில் பழ மரங்கள் நடவு செய்து வளர்க்க, மானியத்தில் கன்றுகள், உரங்கள் வழங்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !