10 அடி நீள மலைப்பாம்பு வனப்பகுதியில் விடுவிப்பு
மேட்டூர்: கொளத்துார், நவப்பட்டி ஊராட்சி கருங்கரட்டை சேர்ந்த விவசாயி ராஜா. இவரது நிலத்தில் நேற்று காலை, பாலமலையில் இருந்து, 10 அடி நீள மலைப்பாம்பு புகுந்தது. இதுகுறித்து தகவல் கிடைக்க, மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வீரர்கள் சென்று, மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். பின் மேட்டூர் வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள், பாலமலையின் அடந்த வனப்பகுதியில் பாம்பை விட்டனர்.