உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆட்டோ கவிழ்ந்து 10 பேர் காயம்

ஆட்டோ கவிழ்ந்து 10 பேர் காயம்

மேட்டூர்: மேட்டூர், நேரு நகர், கால்வாய் பாலம் அருகே, ஞானக்கண் மலை சபை உள்ளது. அங்கு நேற்று காலை ஏராளமானோர் வழி-பட்ட நிலையில், 8 பேர், குமரன் நகரை சேர்ந்த டிரைவர் கண்ணன், 37, ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டனர். நேரு நகர் சாலை இறக்கத்தில் சென்றபோது, டிரைவர், மொபைலில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பெரியண்ணகவுண்டர் நகரை சேர்ந்த பிரவீணா, 36, நடந்து சாலையின் மறுப-குதிக்கு சென்ற நிலையில், அவர் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்-தது. அதில் பயணித்த, குமரன் நகரை சேர்ந்த ஆஷானா, 24, உள்-பட, 8 பேர், டிரைவர், பிரவீணா காயமடைந்து மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேட்டூர் போலீசார், ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி