மது விற்ற 10 பேர் கைது; 2 பார்களுக்கு சீல்
ஆத்துார்: ஆத்துார் அருகே வளையமாதேவி, 'டாஸ்மாக்' கடை எதிரே, அனுமதியின்றி செயல்பட்ட பாரில், சாராயம், மதுபாட்டில் விற்ப-தாக வீடியோ வெளியானது. விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை, கச்சிராயபாளையத்தில் இருந்து சாராயம் வாங்கி வந்தது தெரிந்தது. இதனால் சேலம், கள்ளக்கு-றிச்சி மாவட்ட போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி நேற்று, ஆத்துார் அருகே ராமசேஷபுரம் முருகேசன், 52, புங்கவாடி சுப்ரமணியன், 48, காட்டுக்கோட்டை கணபதி, 32, கல்பகனுார் தனம், 45, அஞ்சலம், 60, ஆகியோரை, ஆத்துார் ஊரக போலீசார் கைது செய்தனர். அவர்களிடம், 60 மதுபாட்டில்-களை பறிமுதல் செய்தனர்.அதேபோல் ஆத்துார், புதுப்பேட்டை, அம்பேத்கர் நகரில், மது-பாட்டில் விற்ற, ஜீவா, 61, அஞ்சலை, 51, ஆகியோரை, ஆத்துார் டவுன் போலீசார் கைது செய்தனர். தலைவாசல் அருகே வெள்-ளையூரில் மதுபாட்டில் விற்ற மலர், 58, என்பவரை, வீரகனுார் போலீசார் கைது செய்தனர்.ஆத்துார் மதுவிலக்கு போலீசார் சோதனையின்போது உமையாள்-புரம் வேல்முருகன், 36, ஆணையாம்பட்டி குணசேகரன், 45, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், வீரகனுார், ராயர்பா-ளையம் மற்றும் வளையமாதேவி ஆகிய இடங்களில், 'டாஸ்மாக்' கடை எதிரே, அனுமதியின்றி செயல்பட்ட இரு பார்க-ளுக்கு, மதுவிலக்கு தாசில்தார் சுமதி தலைமையில் போலீசார், வருவாய்த்துறையினர், 'சீல்' வைத்தனர்.போலீசார் கூறியதாவது: ஆத்துாரில் இன்று(நேற்று), இரண்டாம் நாளில், மொத்தம், 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்க-ளிடம், 850க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்-பட்டது.ஆத்துாரை சேர்ந்த ரவி, கச்சிராயபாளையத்தில் இருந்து சாராயம் வாங்கி வந்தது தெரிந்ததால், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் சோதனை செய்தனர். இதில் ரவிக்கு சாராயம் விற்ற ராஜா என்ப-வரை கைது செய்து, அவரிடம், 8 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கல்வராயன்மலை, தெற்குபட்டி மற்றும் தெங்கியாநத்தம் பகுதிகளில் சாராயம் விற்ற, கோவிந்தன், பெரிய-சாமி கைது செய்யப்பட்டனர். இவர்களிடம், 110 லிட்டர் சாராயம், 220 கிலோ வெல்லம், ஒரு நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.அ.தி.மு.க., - தி.மு.க., பிரமுகர்கள் கைதுகெங்கவல்லி அருகே மண்மலை, பாலக்காட்டை சேர்ந்த, அ.தி.மு.க., பிரமுகர் பரமசிவம், 45. இவரது வீட்டினை, தம்மம்-பட்டி டவுன் பஞ்சாயத்து, 8வது வார்டை சேர்ந்த விஜி, 41, என்-பவர் வாடகைக்கு எடுத்துள்ளார். அங்கு நேற்று, தம்மம்பட்டி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, 15 பெட்டிகளில், 750 மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து, பரமசிவம், விஜியை, போலீசார் கைது செய்தனர்.அதேபோல் கொங்கணாபுரம், கச்சுப்பள்ளி ஊராட்சி, தெற்குகாடு தி.மு.க., கிளை பிரதிநிதி ராஜகோபால், 43. அவரது வீட்டில், கொங்கணாபுரம் போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த, ௧௨ மது-பாட்டில்களை பறிமுதல் செய்து, விற்பனையில் ஈடுபட்டு வந்த, ராஜகோபாலை கைது செய்தனர்.