உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 10 ஆடுகள் கொலை; விவசாயி புகார்

10 ஆடுகள் கொலை; விவசாயி புகார்

ஆத்துார்: ஆத்துார் அடுத்த, தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்து, கருமாயி வட்டத்தை சேர்ந்த விவசாயி ரமேஷ், 35. இவரது, 10 ஆடுகள், நேற்று, பனந்தோப்பில் உள்ள சேகோ ஆலை பகுதியில் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தன. மாடுகள் தண்ணீர் குடிக்கும் தொட்டியில் இருந்த தண்ணீரை அருந்தியதில், ஆடுகள் இறந்ததாக, ரமேஷ் சந்தேகம் அடைந்தார்.தொடர்ந்து அவர், 'உரம் கலந்த தண்ணீரை வைத்து ஆடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தம்மம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ