உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 10 இடத்தில் இறங்கிய நீரிடி குளமானது காலி விளைநிலம்

10 இடத்தில் இறங்கிய நீரிடி குளமானது காலி விளைநிலம்

வீரபாண்டி: சேலம் மாவட்டத்தில் பரவலாக, இரவு முழுதும் இடியுடன் கன-மழை பெய்தது. ஆட்டையாம்பட்டி அருகே நீரிடியால், தண்ணீர் பீறிட்டு வெளியேறியது.சேலம் மாவட்டம் முழுதும் நேற்று முன்தினம் இரவு முழுதும் பரவலாக இடியுடன் கனமழை கொட்டியது. ஆட்டையாம்பட்டி அருகே மருளையம்பாளையம், மாங்குடி தோட்டத்துக்காட்டை சேர்ந்த மருதன் நிலத்தில், 10க்கும் மேற்பட்ட இடங்களில், 'நீர் இடி' இறங்கியது.இதனால் அந்த இடங்களில் தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. இதை அப்பகுதி மக்கள் நேற்று காலை ஆச்சர்யத்துடன் பார்த்-தனர். சுற்றிலும் குடியிருப்புகள் உள்ள நிலையில், காலி விளைநிலத்தில் விழுந்ததால், அசம்பாவிதம் ஏற்படவில்லை. அதேசமயம் கனம-ழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் வெள்ளம்போல் பாய்ந்தோடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ