உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ராஜகணபதி கோவிலில் இன்று 1,008 கலசாபிேஷகம்

ராஜகணபதி கோவிலில் இன்று 1,008 கலசாபிேஷகம்

சேலம், சேலம் ராஜகணபதி கோவில் கும்பாபி ேஷக, 12ம் ஆண்டு விழா, கணபதி பூஜையுடன் நேற்று தொடங்கியது. அதில் நவகலச யாக பூஜை, மகா பூர்ணாஹூதியுடன் முடிந்து மூலவர் விநாயகருக்கு அபிேஷகம், அலங்கார பூஜை செய்யப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. இரவு பக்தர்களின் பஜனை பாடல்கள், சிறப்பு பூஜை நடந்தது. இன்று காலை, 10:00 மணிக்கு, புனித நீர் நிரப்பிய, 1,008 கலசங்களை வைத்து சிறப்பு யாக வேள்வி நடக்கிறது. தொடர்ந்து மூலவருக்கு அபிேஷகம், புஷ்பாஞ்சலி நடக்கிறது. அதேபோல், 2ம் அக்ரஹாரம் ஆனந்தா பாலம் அருகே உள்ள லட்சுமி நாராயணர் கோவில் கும்பாபிேஷக, 2ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. அதில் காலை, 10:00 முதல், 12:00 மணி வரை, சிறப்பு யாக பூஜை செய்து, அதில் பூஜித்த புனிதநீரால், மூலவர் லட்சுமி நாராயணருக்கு அபி ேஷகம் செய்யப்பட்டது. பின் மூலவருக்கு தங்க கவசம் அணிவித்து மகா தீபாராதனையுடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலையில் உற்சவர் லட்சுமி நாராயணர், சர்வ அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை ஸாதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை