உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 11 வீடுகளில் திருடியவர் சிக்கினார்50 பவுன் நகைகளை மீட்ட போலீஸ்

11 வீடுகளில் திருடியவர் சிக்கினார்50 பவுன் நகைகளை மீட்ட போலீஸ்

11 வீடுகளில் திருடியவர் சிக்கினார்50 பவுன் நகைகளை மீட்ட போலீஸ்சேலம்:சேலம், அழகாபுரம் ரெட்டியூர், என்.டி.எஸ்., நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 59. இவர் கடந்த, 6ல் வீட்டை பூட்டி விட்டு நெய்க்காரப்பட்டியில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை, 7:00 மணிக்கு வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு அதன் ரகசிய அறையில் இருந்த, டாலர் சங்கிலி, மோதிரம், நெக்லஸ், ஜிமிக்கி, தோடு என, 17 பவுன் நகைகள் திருடுபோனது தெரிந்தது.இதுகுறித்து அவர் புகார்படி அழகாபுரம் போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்து விசாரித்தனர். தொடர்ந்து, எம்.பாலப்பட்டி, கோராத்துப்பட்டி அடுத்த மேட்டுக்காட்டை சேர்ந்த கார்த்திகேயன், 33, என்பவரை நேற்று கைது செய்தனர். மேல் விசாரணையில் கடந்த இரு ஆண்டில், ராஜேந்திரன் வீடுடன் சேர்ந்து, அழகாபுரத்தில், 3, கன்னங்குறிச்சியில், 6, வீராணத்தில் 2 என, 11 வீடுகளின் பூட்டுகளை உடைத்து, கைவரிசை காட்டி நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரது வாக்குமூலப்படி, 50 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி