உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 11 தொகுதி மறுசீரமைப்பு த.மா.கா., வலியுறுத்தல்

11 தொகுதி மறுசீரமைப்பு த.மா.கா., வலியுறுத்தல்

சேலம், டிச. 24-சேலம் மேற்கு மாவட்ட த.மா.கா., தொழிற்சங்க தலைவர் சின்னப்பன் தலைமையில், அக்கட்சியினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவின் விபரம்:சேலம் மாவட்டத்தில் உள்ள, 11 சட்டசபை தொகுதிகள், 50 ஆண்டுக்கும் மேலாக மறுசீரமைப்பு செய்யாமல் உள்ளது. தற்போது ஊராட்சி வார்டுகள் வரையறை செய்த பிறகே, உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல, 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலில், மாவட்டத்தில் உள்ள, 11 சட்டசபை தொகுதிகளில், தனித்தொகுதிகளை, பொது தொகுதியாகவும், பொது தொகுதியை, தனி தொகுதியாக சுழற்சி முறையில் மறுசீரமைப்பு செய்து, மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை