11 பவுன் நகைகள் ரூ.53,000 திருட்டு
சேலம், சேலம், அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுதாகர், 43. கடந்த, 30 காலை, வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இரவு வீடு திரும்பிய போது, கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 11.2 பவுன் நகைகள், 53,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது.மேலும் வேறு சாவி போட்டு பூட்டை திறந்து திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதுகுறித்து நேற்று முன்தினம் சுதாகர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.