உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சரக்கு வாகனம் கவிழ்ந்து 11 தொழிலாளி படுகாயம்

சரக்கு வாகனம் கவிழ்ந்து 11 தொழிலாளி படுகாயம்

பெத்தநாயக்கன்பாளையம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 11 பேர், பாக்கு காய் அறுக்க கூலி வேலைக்கு, நேற்று காலை, 8:00 மணிக்கு, சரக்கு வாகனத்தில் தும்பல் என்ற இடத்திற்கு புறப்பட்டனர். படுவக்காட்டை சேர்ந்த சிதம்பரம், 30, ஓட்டினார். இடையப்பட்டி புதுார் அருகே சென்றபோது, சாலையோரம் கட்டப்பட்டிருந்த மாடு திடீரென சாலைக்கு ஓடி வந்தது. உடனே சிதம்பரம், வாகனத்தை நிறுத்தினார். இதனால், கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்து சிறிது துாரம் சென்று கவிழ்ந்தது. இதில் டிரைவர் சிதம்பரம், தொழிலாளர்கள் உள்ளிட்ட, 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு, பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை