உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப தேர்வு சேலத்தில் 1,100 பேர் ஆப்சென்ட்

டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப தேர்வு சேலத்தில் 1,100 பேர் ஆப்சென்ட்

சேலம்: தமிழகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் கிரேடு 2, டிராப்ட்ஸ்மேன் கிரேடு 2, இளநிலை வரைவு அலுவலர், இள-நிலை தொழில்நுட்ப உதவியாளர், சிறப்பு மேற்பார்வையாளர், சர்வேயர், உதவி வேளாண் அலுவலர், நெசவு மேற்பார்வை-யாளர், ஆவின் ஆய்வக நிர்வாகி, பாய்லர் டெக்னீஷியன் உள்-ளிட்ட டிப்ளமோ, ஐ.டி.ஐ., கல்வி தகுதியுடைய, 861 இடங்-களை நிரப்புவதற்கு, டி.என்.பி.எஸ்.சி., போட்டித்தேர்வு நேற்று தொடங்கியது. அதில் பொது அறிவு, கட்டாய தமிழ் மொழி தகு-தித்தேர்வு, ஓ.எம்.ஆர்., சீட் வடிவில், நேற்று காலை நடந்தது. சேலம் மாவட்டத்தில், 2,682 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,570 பேர் பங்கேற்றனர். 1,112 பேர் வரவில்லை. மற்ற பாடங்களுக்கான தேர்வுகள், நவ., 11 முதல், 16 வரை, கணினி வழியில் நடத்தப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ