விபத்தில் 12 பேர் காயம்
ஓமலுார்: கர்நாடகா மாநிலம் சிப்பார பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 25. இவருடன் சேர்த்து அப்பகுதியை சேர்ந்த 11 பேர், கேரள மாநிலம் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு சென்றனர். தரிசனம் முடிந்து, டெம்போ டிராவலர் வாகனத்தில், கர்நாடகா நோக்கி வந்து கொண்டிருந்தனர். வருண்குமார் என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, சேலம் மாவட்ட எல்லையான தொப்பூர் அருகே வந்தபோது, சாலை ஓரம் நின்றிருந்த கர்நாடகா பதிவெண் கொண்ட பஸ் பின்புறம், டெம்போ டிராவலர் மோதியது. இதில் மணிகண்டன் உள்பட, 12 பேர் காயம் அடைந்தனர். அவர்கள், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.