உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வளர்ப்பு நாய் கடித்து 12 வயது சிறுமி படுகாயம்

வளர்ப்பு நாய் கடித்து 12 வயது சிறுமி படுகாயம்

சேலம்: ஓமலுார் அருகே, கொல்லப்பட்டி புதுாரை சேர்ந்த செல்வராஜ் மகள் தர்ஷினிபிரியா, 12. இவர், கருப்பூர் அரசுப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 10 இரவு, 7:00 மணிக்கு சிறுமி, வீட்டருகே உள்ள தோட்டத்தை அடுத்த கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வளர்ப்பு நாய் சிறுமியை கடித்து குதறி-யதில், தலை, தோள்பட்டை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் துடிதுடித்தார். ஓமலுார் அரசு மருத்துவ-மனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருப்பூர் போலீசார், வளர்ப்பு நாய் உரி-மையாளர் பாலசுப்ரமணியம், 60, மீது வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி