புகையிலை விற்ற 120 கடைகளுக்கு சீல்
சேலம், சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள், போலீசார் இணைந்து, இம்மாதம், 1 முதல், நேற்று வரை, 3,280 கடைகளில் சோதனை நடத்தி, 26 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 55 கடைகளுக்கு, 15.75 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 50 கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. அதேபோன்று கடந்த ஜூலையில், 3,897 இடங்களில் சோதனை நடத்தி, 141 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 76 கடைகளுக்கு, 23.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 70 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.