ஹோலி கிராஸ் மெட்ரிக் பள்ளியில் வந்தே மாதரம் 150 ஆண்டு நிறைவு விழா
சேலம்,:'வந்தே மாதரம்' பாடல் எழுதி, 150ம் ஆண்டு நிறைவு விழா, சேலம், அம்மாபேட்டை ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கொண்டாடப்பட்டது. அதில் பள்ளியின் தேசிய தரைப்படை மாணவர்களுக்கு, 'வந்தே மாதரம்' தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. 100 மாணவர்கள் பங்கேற்றனர். சிறப்பாக ஓவியம் வரைந்தவர்கள், பாட்டுப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, பள்ளி முதல்வர் சேசுராஜ் பரிசு வழங்கி பாராட்டினார். துணை முதல்வர் குணசீலன், வந்தே மாதரம் பாடல் குறித்து பேசினார். இதில், 12 தமிழ்நாடு பட்டாலியன் சுபேதார், ஹவில்தார் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை, பள்ளியின் தேசிய தரைப்படை முதல் அலுவலர் அருள் செய்திருந்தார்.