உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மழையால் 15,740 ஏக்கர் பயிர்கள் பாதிப்பு

மழையால் 15,740 ஏக்கர் பயிர்கள் பாதிப்பு

ஆத்துார்: சேலம் மாவட்டத்தில் ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, வீர-கனுார், தம்மம்பட்டி, வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் பருவ மழை காலங்களில் ஆறு, ஏரிகளின் நீர் ஆதாரம் மூலம் கரும்பு, நெல், மரவள்ளி, பருத்தி, மக்காச்சோளம், காய்கறி சாகு-படி செய்யப்படுகின்றன.வடகிழக்கு பருவ மழையின்போது ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா பகுதிகளில் கன மழையாக பெய்தது.இதனால், ஆறு, ஏரி, நீரோடை பகுதிகளில் உள்ள மரவள்ளி, மக்-காச்சோளம், பருத்தி தோட்டங்களில் மழைநீர் புகுந்தது. அறு-வடை நிலையில் உள்ள மரவள்ளி கிழங்குகள் மேலே வந்து செடிகள் சாய்ந்து கிடக்கின்றன. தவிர மழைநீர் தேங்கிய தோட்-டங்களில் மரவள்ளி அழுகிய நிலையில் காணப்படுகிறது. அறு-வடை செய்ய முடியாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்-ளனர்.இதுகுறித்து தலைவாசல் விவசாயி கோவிந்தராஜ் கூறுகையில், ''மழையால் மரவள்ளி கிழங்குகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்-ளன. சேதமடைந்த மக்காச்சோளம், மரவள்ளி உள்ளிட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்,'' என்றார்.இதுகுறித்து சேலம் வேளாண், தோட்டக்கலை அலுவலர்கள் கூறி-யதாவது:சேலம் மாவட்டத்தில் ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, பெத்-தநாயக்கன்பாளையம் வாழப்பாடி பகுதிகளில், 92,000 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுதும் பருவ மழையில், 60,480 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் மூழ்கின. 12,500 ஏக்-கரில் மக்காச்சோளம், 255 ஏக்கர் நெல், சிறுதானிய பயிர், பருப்பு வகை பயிர், எண்ணெய் வித்து பயிர், பருத்தி, துவரை என, 14,560 ஏக்கர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் தோட்டகலை பயிரான மரவள்ளி, 32,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 70 சதவீத மரவள்ளி அறுவடை செய்துள்ளனர். கன மழையில், 390 ஏக்கர் மரவள்ளி பாதித்துள்-ளது. மஞ்சள், மரவள்ளி, தென்னை, பாக்கு, காய்கறி உள்பட, 1,180 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது. வேளாண், தோட்டக்கலைத்துறையில், 15,740 ஏக்கர் பயிர்கள் மழையில் பாதிக்கப்பட்டது, ஆய்வில் தெரியவந்தது. இதுகுறித்து பேரிடர் மேலாண் துறைக்கு இழப்பீடு கேட்டு அறிக்கை அனுப்-பியுள்ளோம். தமிழக அரசு இழப்பீடு வழங்கிய பின், விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ