மேலும் செய்திகள்
4 கிலோ கஞ்சா ரயிலில் மீட்பு
15-Jun-2025
சேலம், தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று, சேலம் வந்தது. அப்போது, சேலம் ரயில்வே போலீசார், சோதனை நடத்தினர். கழிப்பறை அருகே கேட்பாரற்று கிடந்த பையில், 18.5 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை கைப்பற்றி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசிடம் ஒப்படைத்தனர். கஞ்சாவை கடத்தி வந்தவர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். அதேபோல் சூரமங்கலம் போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த, ஓமலுாரை சேர்ந்த ராகுல், 21, என்பவரை கைது செய்து, 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
15-Jun-2025