உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 19 ஆண்டுகள் தலைமறைவாக இருப்பவர் ஆஜராக உத்தரவு

19 ஆண்டுகள் தலைமறைவாக இருப்பவர் ஆஜராக உத்தரவு

சேலம்:நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஓடப்பள்ளி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய முதல் மனைவி செல்வகுமாரி இறந்த நிலையில், இரண்டாவதாக சுகவனேஸ்வரி, 20, என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் வீரபாண்டி சமத்துவபுரத்தில் தங்கியிருந்தனர். அப்போது பரமசிவத்திற்கு தகாத உறவு இருந்து வந்தது. இது குறித்து சுகவனேஸ்வரி கண்டித்துள்ளார்.கடந்த, 2005ல் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் பரமசிவம் தாக்கியதில் சுகவனேஸ்வரி உயிரிழந்தார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, பரமசிவத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்த அவர், 2006ல் தலைமறைவானார். இந்த வழக்கு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பரமசிவத்துக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. ஜூன், 9ல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த வேண்டும் என, நீதிபதி சுமதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ