உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 1,950 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் மில் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது

1,950 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் மில் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது

சேலம்: சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று, பூலாவ-ரியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தபோது, 21 மூட்டைகளில், 1,050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில், ஜாரி கொண்டலாம்பட்டியை சேர்ந்த நடராஜ், 46, மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு விற்று வந்-தது தெரிந்தது. நடராஜை கைது செய்த போலீசார், 1,050 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர்.அதேபோல் சிவதாபுரத்தில் போலீசார் ரோந்து சென்றபோது, அங்-குள்ள மாவு மில்லில் சோதனை செய்தனர். அப்போது, 18 மூட்-டைகளில், 900 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மில் உரிமையாளர் முருகேசன், 60, என தெரிந்தது. அவரை கைது செய்து விசாரித்ததில், மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை மாவாக்கி விற்று வந்-தது தெரிந்தது. அவரிடம் இருந்து, 900 கிலோ அரிசி, வேனை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !