உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போதை மாத்திரை பறிமுதல் விற்க முயன்ற 2 பேர் கைது

போதை மாத்திரை பறிமுதல் விற்க முயன்ற 2 பேர் கைது

சேலம், சேலம், பள்ளப்பட்டி போலீசார், புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள தண்ணீர் தொட்டி பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்ததில், கோவை, சிங்காநல்லுார், வெள்ளலுார் ஹவுசிங் யுனிட்டை சேர்ந்த ேஷக் மொகைதீன், 29, ஆத்துபாலம் திவாகர், 21, என்பதும், இருவரிடமும் நடத்திய சோதனையில், 361 போதை மாத்திரைகள் வைத்திருந்ததும், கல்லுாரி மாணவர்களுக்கு விற்க கொண்டு வந்ததும் தெரிந்தது. இதனால் மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை