மேலும் செய்திகள்
12 கிலோ குட்கா பறிமுதல்
21-Dec-2024
குட்கா பறிமுதல இருவர் கைது
09-Dec-2024
கெங்கவல்லி: ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் போலீசார், கெங்க-வல்லியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வந்த, 'இண்டிகோ' காரை நிறுத்தி, சோதனை செய்தபோது, 100 கிலோவில், 2 லட்சம் ரூபாய் மதிப்பில் புகையிலை இருந்தது தெரிந்தது. அத்துடன் காரை பறிமுதல் செய்து, அதில் வந்த இருவரிடம் விசாரித்ததில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, மங்களபு-ரத்தை சேர்ந்த பிரசாந்த், 25, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்-பாளையம் அருகே தமையனுாரை சேர்ந்த சிவபாலன், 35, என தெரிந்தது. இருவரையும் கைது செய்தனர். மேலும் சின்னசே-லத்தில் இருந்து கடத்தி வந்ததாக கூறியதால், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார், புகையிலை பதுக்கி வைத்திருந்த குடோன் குறித்து விசாரிப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.
21-Dec-2024
09-Dec-2024