மேலும் செய்திகள்
டாஸ்மாக் விற்பனையாளர்களை தாக்கியவர் கைது
19-May-2025
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம் காக்கங்கரை பகுதியில், டாஸ்மாக் கடை உள்ளது. விற்பனையாளராக சிவானந்தம் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார். கண்ணாலபட்டியை சேர்ந்த கோபி, 28, கவுண்டப்பனுாரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 27, கடனுக்கு மது கேட்டுள்ளனர். அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த இருவரும், பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். கந்திலி போலீசில் சிவானந்தம் கொடுத்த புகார்-படி, இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்
19-May-2025