உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2.5 பவுன் சங்கிலி மீட்பு ரவுடி உள்பட 2 பேர் கைது

2.5 பவுன் சங்கிலி மீட்பு ரவுடி உள்பட 2 பேர் கைது

சேலம், நவ. 3-சேலம், பொன்னம்மாபேட்டை தாண்டவன் நகர், 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நடராஜ், 35. இவரது தம்பி பிரபு, 30. இருவரும் கடந்த, 1 இரவு, 9:00 மணிக்கு சேலம் டவுன் லிவோ காலனி மேம்பாலத்தின் கீழ் அமர்ந்து மது அருந்தினர். அப்போது ஆட்டோவில் அங்கு வந்த, கிச்சிப்பாளையத்தை சேர்ந்த, நந்தகுமார், 26, இருவரிடமும் தகராறு செய்தார். பின் நடராஜ் அணிந்திருந்த, 2.5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டார். இதுகுறித்த புகார்படி, சேலம் டவுன் போலீசார் விசாரித்து, நந்தகுமார், அவரது கூட்டாளியான கிச்சிப்பாளையம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அஷ்ரப் அலி, 29 ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில் கொலை வழக்கில் தொடர்புடைய நந்தகுமார் ரவுடி என்பதும், ஆட்டோ டிரைவர் மீது அடிதடி வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. அவர்களிடம், 2.5 பவுன் சங்கிலியை மீட்ட போலீசார், இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி