உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபைல் திருடிய 2 பேர் சிக்கினர்

மொபைல் திருடிய 2 பேர் சிக்கினர்

சேலம், சேலம், பச்சப்பட்டி, குஞ்சான்காடு அருகே புது மஸ்ஜித் தெருவை சேர்ந்தவர் சபீர் அலி, 31. பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மொபைல் போன் கடை நடத்துகிறார். கடந்த, 13 இரவு, அவர் கடையை பூட்டிச்சென்றார். நேற்று முன்தினம் காலை வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 43,000 ரூபாய் மதிப்பில், 10 மொபைல் போன்கள், 12,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது.சபீர் அலி புகார்படி, டவுன் போலீசார், 'சிசிடிவி' காட்சி பதிவுகளை ஆய்வு செய்ததில், சிவதாபுரம், அண்ணா நகரை சேர்ந்த அய்யனார், 19, பூலாவரி, கீழக்காடு நடராஜ், 28, ஆகியோர் திருடியது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், மொபைல் போன்கள், பணத்தை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி