மேலும் செய்திகள்
முதியவர் மாயம்
07-Nov-2025
சேலம், புது மணப்பெண் உள்பட 2 பெண்கள் மாயமானது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 26, இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு, தீபா, 19 என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். உறவினர் வீட்டுக்கு செல்ல, 8 ம் தேதி சேலம் புது பஸ் ஸ்டாண்ட் வந்துள்ளனர். பஸ்ஸூக்கு காத்திருந்த போது, தீபா திடீரென மாயமாகியுள்ளார். பஸ் ஸ்டாண்ட் முழுவதும் தேடி பார்த்தும் கிடைக்காததால், பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.சேலம் திருவாக்கவுண்டனுாரை சேர்ந்த ராஜி மகள் ஹரிணி, 22, இவர் கந்தம்பட்டியில் உள்ள தனியார் ஆய்வகத்தில், லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ஹரிணி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், ராஜி சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பாம்பு தீண்டி மூதாட்டி சாவு
07-Nov-2025