உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மூதாட்டி உள்பட 2 பேர் மாயம்

மூதாட்டி உள்பட 2 பேர் மாயம்

ஆத்துார்: ஆத்துார் அருகே ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த, தர்ம-லிங்கம் மனைவி தெய்வானை, 85. இவர் கடந்த, 17ல், சின்னகிருஷ்ணாபுரத்தில் உள்ள மகள் அஞ்சலம் வீட்டுக்கு செல்வதாக புறப்பட்டார். ஆனால் அங்கு செல்லாததோடு வேறு எங்கு தேடியும் அவரை காணவில்லை. இதுகுறித்து மகன் ராஜேந்திரன் அளித்த புகார்படி, ஆத்துார் ஊரக போலீசார், தெய்வானையை தேடுகின்றனர்.அதேபோல் தாரமங்கலத்தை சேர்ந்த லாரி டிரைவர் சக்திவேல், 29. திருமணமாகவில்லை. பெற்றோருடன் வசித்த இவர், கடந்த அக்., 22ல் மாயமானார். எங்கு தேடியும் கிடைக்காததால், அவ-ரது அண்ணன் மாரியப்பன் புகார்படி, தாரமங்கலம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து, சக்திவேலை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ