உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெவ்வேறு விபத்து 2 பேர் உயிரிழப்பு

வெவ்வேறு விபத்து 2 பேர் உயிரிழப்பு

ஓமலுார் ஓமலுார் அருகே காமலாபுரம், மாதேஸ்வரன் காட்டுவளவை சேர்ந்தவர் ரத்தினம், 56. விவசாயி. இவர் கடந்த, 18ல், காமலாபுரம் மேம்பாலம் அருகே, டி.வி.எஸ்., மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது, பெங்களூரு நோக்கி சென்ற, மாருதி கார் மோதி படுகாயம் அடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று உயிரிழந்தார்.அதேபோல் செம்மாண்டப்பட்டியை சேர்ந்த பெருமாள், 74, என்பவர், கடந்த, 18ல் அதே பகுதியில் உள்ள சின்னதிருப்பதி சாலையில் சென்றபோது, 'பல்சர்' பைக் மோதி படுகாயம் அடைந்தார். அவரும், சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை