போதை ஊசி விற்ற 2 பேர் கைது
சேலம்: சேலம், ஆனந்தா பாலம் பகுதியில் மாநகராட்சி சார்பில், 5 மாடி கொண்ட அடுக்குமாடி வாகன நிறுத்தும் இடம் கட்டப்பட்டுள்-ளது. இன்னும் பயன்பாட்டுக்கு வராத நிலையில், சமூக விரோதி-களின் கூடாரமாக மாறியது.நேற்று முன்தினம் சில வாலிபர்கள், காவலாளியை மிரட்டி, அந்த கட்டடத்தில் புகுந்து போதை ஊசியை பயன்படுத்தினர். இதனால் டவுன் உதவி கமிஷனர் ஹரிசங்கரி தலைமையில் தனிப்படை போலீசார், நேற்று ஆய்வு செய்தனர். அப்போது போதை ஊசி உள்ளிட்டவை இருப்பது தெரிந்தது. தொடர்ந்து விசாரித்ததில், அப்பகுதியில் சட்டவிரோதமாக போதை மாத்-திரை, ஊசிகளை விற்ற, திருவாக்கவுண்டனுார், கண்ணகி தெருவை சேர்ந்த தீபக் சரண், 23, ஜாகீர் அம்மாபாளையம் சக்தி கோவில் தெருவை சேர்ந்த தனசேகரன், 27, ஆகியோர், அப்பகு-தியில் உள்ள வாலிபர்களுக்கு போதை ஊசி, மாத்திரை விற்றது தெரிந்தது. இதனால் இருவரையும் கைது செய்த போலீசார், போதை மாத்திரை - 14, ஊசி - 8, ஊசிக்கு பயன்படுத்தும், 100 மில்லி பாட்டில் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தவிர போதை ஊசி பயன்படுத்திய, 4 பேரை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பினர்.