உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நீதிமன்றத்தில் ஆஜராகாத 2 பேர் 3 ஆண்டுக்கு பின் திருப்பூரில் சிக்கினர்

நீதிமன்றத்தில் ஆஜராகாத 2 பேர் 3 ஆண்டுக்கு பின் திருப்பூரில் சிக்கினர்

தாரமங்கலம்: தாரமங்கலத்தை சேர்ந்த, 15 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த சரண்குமார், 27, சண்முகராஜ், 29, ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில், 2020 செப்., 11ல் சிறுமிக்கு குழந்தை பிறந்தது. அவர் புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரித்து, அதே ஆண்டு, செப்., 15ல், இருவரையும் கைது செய்தனர். 'போக்சோ' நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில், இருவரும் ஆஜராகாமல் தலைமறைவாகினர். இதனால் அவர்களை பிடிக்க, 2022 ஜூன், 21ல் நீதிபதி உத்தர-விட்டார். இதையடுத்து, தாரமங்கலம் போலீசார் தேடிவந்தனர். அவர்கள் திருப்பூரில் இருப்பதாக, தகவல் கிடைக்க அங்கு சென்ற போலீசார், பிச்சம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் இருந்த இரு-வரையும், நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு சுற்றிவளைத்து கைது செய்தனர். தொடர்ந்து தாரமங்கலம் அழைத்து வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ