இன்று முதல் 3 நாட்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்
இன்று முதல் 3 நாட்களுக்கு200 சிறப்பு பஸ்கள் இயக்கம்சேலம், செப். 20-இன்று முதல், 3 நாட்களுக்கு, 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதுகுறித்து சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் அறிக்கை: வார இறுதி நாட்களை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பில், செப்., 20(இன்று) முதல், 22 வரை, 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அந்த பஸ்கள், சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கு இயக்கப்படுகின்றன. அதேபோல் சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூரு; ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை; நாமக்கல்லில் இருந்து சென்னை; திருச்சியில் இருந்து ஓசூர்; திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு; ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலுார்; சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரம்; ஈரோட்டில் இருந்து பெங்களூரு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இதற்கு அரசு விரைவு போக்குவரத்து முன்பதிவு மைய இணையதளம், அதன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.