மேலும் செய்திகள்
விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள் தொடர்ச்சி...
17-Nov-2024
ஆத்துார், டிச. 8-கார்த்திகை பிறந்தது முதல், ஆத்துார், புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வெள்ளை விநாயகர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். சில நாட்களாக பக்தர்கள் சபரிமலைக்கு புறப்பட்டு வருகின்றனர். நேற்றும் ஏராளமான பக்தர்கள், சபரிமலைக்கு செல்ல, அக்கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டனர். அப்போது பெண் பக்தர்கள் சிலர், ஐயப்பா சரணம் பாடல்களை பாடினர். தொடர்ந்து மாலை அணிந்தவர்களது குடும்பத்தினர், பக்தர்கள், இருமுடி கட்டிக்கொண்ட ஐயப்ப பக்தர்கள், காலில் விழுந்து வணங்கினர். இக்கோவிலில் கார்த்திகையில் இதுவரை, 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்துள்ளதாக, கோவில் அர்ச்சகர் சரவணன் தெரிவித்தார்.
17-Nov-2024