உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கார் விற்பனை, சர்வீஸ் சென்டரில் 21 லட்சம் ரூபாய் திருட்டு

கார் விற்பனை, சர்வீஸ் சென்டரில் 21 லட்சம் ரூபாய் திருட்டு

சேலம்: சேலம், கந்தம்பட்டி திருமகள் பைபாஸ் பகுதியில், டொயோட்டோ கார் விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர் இயங்கி வருகிறது. நேற்று மாலை பணியை முடித்த பின், ஊழியர்கள் ஷோரூமை பூட்டிவிட்டு சென்றனர்.இரவு பணியில் காவலாளி பழனிசாமி, 54, இருந்துள்ளார். வழக்கம் போல ஷோரூமை சுற்றிப் பார்த்தபோது கடை ஷட்டர் உடைக்கப்பட்டு, திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, இரும்பு கல்லா பெட்டியை இரும்பு ராடால் நெம்பி அதிலிருந்த பணத்தை திருடி சென்றுள்-ளனர்.இதையடுத்து, மேலாளர் ஜெகன்நாதன் கடைக்கு வந்து பார்த்த-போது, கல்லாப்பட்டியில் இருந்த, 21 லட்சம் ரூபாய் திருடப்பட்-டிருந்தது தெரியவந்தது. பின், சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் ஜெகநாதன் அளித்த புகார்படி, உதவி கமிஷனர் நில-வழகன், இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, மனோன்மணி உள்-ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். தடய அறிவியல் நிபுணர் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ