குப்பை கொட்டுவதை தடுத்த 22 பேருக்கு காப்பு
இடைப்பாடி, அரசிராமணி டவுன் பஞ்சாயத்தில் சேகரிக்கப்படும் குப்பையை, குறுக்குப்பாறையூரில் கொட்ட, விவசாயிகள், விவசாய சங்கத்தினர், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று காலை, தமிழ்நாடு விவசாய சங்க சங்ககிரி தாலுகா செயலர் ராஜேந்திரன் தலைமையில் பலர், குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, அங்கு நடக்கும் கட்டுமான பணியை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேவூர் போலீசார், டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் தம்பிதுரை பேச்சு நடத்தியும் பலனில்லை. இதனால் போலீசார், 22 பேரையும் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.