உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 5 மாதங்களில் 241 டி.எம்.சி., நீர் வரத்து ஓராண்டுக்கு வழங்குவதை விட அதிகம்

5 மாதங்களில் 241 டி.எம்.சி., நீர் வரத்து ஓராண்டுக்கு வழங்குவதை விட அதிகம்

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு, 5 மாதங்களில் 241.5 டி.எம்.சி., நீர் வந்துள்-ளது. இது ஓராண்டுக்கு வழங்க வேண்டியதை விட, 64 டி.எம்.சி., அதிகம்.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா ஆண்டுதோறும் தமிழகத்துக்கு, 177.25 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். இதில் ஜூனில், 9.19, ஜூலையில், 31.24, ஆகஸ்டில், 45.95, செப்டம்பரில், 36.76, அக்டோபரில், 20.22, நவம்பரில், 13.78, டிசம்பரில், 7.35, ஜன-வரியில், 2.76, பிப்ரவரி முதல் மே வரை, 4 மாதங்கள் தலா, 2.5 டி.எம்.சி., வீதம் வழங்க வேண்டும்.இதில் ஜூன் முதல் அக்டோபர் வரை, 143.36 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். ஆனால் கடந்த ஜூனில், 0.5, ஜூலையில், 90, ஆகஸ்டில், 86, செப்டம்பரில், 24, அக்டோபரில், 41 என, 241.5 டி.எம்.சி., நீர், மேட்டூர் அணைக்கு வந்துள்ளது. இது ஓராண்டுக்கு வழங்க வேண்டியதை விட, 64 டி.எம்.சி., அதிக-மாகும்.நேற்று முன்தினம் வினாடிக்கு, 14,404 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 9,601 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 1,000 கன-அடி நீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டது. திறப்பை விட வரத்து கூடுதலாக இருந்ததால் நேற்று முன்தினம், 115.32 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 115.78 அடியாக சற்று உயர்ந்-தது. அணை நிரம்ப இன்னும், 6.5 டி.எம்.சி., நீர் மட்டும் தேவை என்பதால், விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !