உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க.,வில் 280 பேர் ஐக்கியம்

தி.மு.க.,வில் 280 பேர் ஐக்கியம்

சேலம், ஓமலுார், திண்டமங்கலம், எட்டிகுட்டப்பட்டி, கோட்டைமேட்டுப்பட்டி, சங்கீதப்பட்டி, ஊ.மாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், அ.ம.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ., தே.மு.தி.க., ஆகிய கட்சிகளில் இருந்து விலகிய, 280 பேர், தி.மு.க.,வில் இணையும் விழா, சேலம், புது பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள கலைஞர் மாளிகையில் நேற்று நடந்தது.அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில், 280 பேரும், தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களுக்கு அமைச்சர் ராஜேந்திரன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.இதற்கான ஏற்பாட்டை, ஓமலுார் கிழக்கு ஒன்றிய செயலர் ரமேஷ், தெற்கு ஒன்றியம் செல்வகுமார் செய்திருந்தனர். மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி