உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சம்

ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சம்

ஆத்துார், ஒரே நாளில், 3 காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு, ஆத்துார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர்.சேலம் மாவட்டம் ஆத்துார், அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் அன்பரசன், 28. பி.இ., மெக்கானிக்கல் முடித்துவிட்டு, ஆத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஒதியத்துாரை சேர்ந்தவர் ஸ்ரீசக்தி, 20. பி.எஸ்சி., பயோடெக் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர்கள் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர்.வெவ்வேறு சமுதாயத்தினர் என்பதால், இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 9ல் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நேற்று, ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். இரு வீட்டு பெற்றோரை அழைத்து பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அன்பரசனின் உறவினர், ஜோடியை அழைத்துச்சென்றார்.அதேபோல் மல்லியக்கரை ஊராட்சி கருத்தராஜாபாளையத்தை சேர்ந்தவர் நவீன்குமார், 25. பிளஸ் 2 முடித்த இவர், சென்னையில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் அழகு சாந்தனா, 22. பி.இ., எலக்ட்ரிக்கல் படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.இருவரும் காதலித்த நிலையில், வெவ்வேறு சமுதாயம் என்பதால், இரு வீட்டினரும் ஏற்கவில்லை. கடந்த, 9ல் திருமணம் செய்து கொண்டனர். நேற்று ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். இரு வீட்டு பெற்றோரும் திருமணத்தை ஏற்கவில்லை. இதனால் நவீன்குமார், மனைவியை, சென்னை அழைத்துச்செல்வதாக கூறி புறப்பட்டார்.சிறுமியுடன் திருமணம்சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் வாசுதேவன், 21. தனியார் பாலிடெக்னிக்கில், 2ம் ஆண்டு படிக்கிறார். அதே பகுதியை சேர்ந்த, பிளஸ் 2 முடித்த, 18 வயது சிறுமியை காதலித்து, கடந்த, 12ல் திருமணம் செய்து கொண்டார். நேற்று ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். விசாரணையில் சிறுமிக்கு, 18 வயது பூர்த்தியாகாததும், சிறுமியின் பெற்றோர், கிச்சிப்பாளையம் போலீசில் ஏற்கனவே புகார் அளித்ததும் தெரிந்தது. இதனால் சிறுமி, வாசுதேவனை, கிச்சிப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை