உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் மாயம்

கார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் மாயம்

சேலம், ஆட்டையாம்பட்டி, ராஜபாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார், 35. சேலத்தில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த, 18ல் பணிக்கு சென்ற அவர், வீடு திரும்பவில்லை. அவரது தந்தை சுவாமிநாதன், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.அதேபோல் கன்னங்குறிச்சி, சின்ன கொல்லப்பட்டியை சேர்ந்தவர் சம்பத்குமார், 42. அதே பகுதியில் உள்ள ஓட்டலில் பணிபுரிகிறார். கடந்த, 14ல் பணிக்கு சென்ற அவர், வீடு திரும்பவில்லை. அவரது மனைவி பாக்கியலட்சுமி புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் தேடுகின்றனர்.மேலும் ஓமலுார், தாத்தியம்பட்டியை சேர்ந்தவர் சதாசிவம், 65. இவரது மகன் கோகுல், வீட்டின் அருகே மில் நடத்துகிறார். தந்தை, மகன் இடையே, சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த சதாசிவம், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியேறினார். பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கோகுல் புகார்படி, கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி