மேலும் செய்திகள்
தொழிலதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி
09-Aug-2025
சேலம்: சேலம், அம்மாபேட்டை, உடையாப்பட்டியை சேர்ந்த, சக்-திவேல் மகள் மதுமிதா, 19. தனியார் கல்லுாரியில் படித்து வந்த அவர், நேற்று முன்தினம் காலை, சான்றிதழ்களை ஜெராக்ஸ் எடுப்பதாக கூறி, வீட்டில் இருந்து வெளியேறினார். பின் திரும்பி வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது தாய் பூங்-கொடி புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.அதேபோல் கிச்சிப்பாளையம், பெருமாள் தெருவை சேர்ந்தவர் கண்ணம்மாள், 70. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கடந்த, 28ல் வீட்டில் இருந்து மாயமானார். அவரது பேரன் குட்டியப்பன் புகார்படி கிச்சிப்பாளையம் போலீசார் தேடுகின்றனர். மேலும் பனமரத்துப்பட்டி, அருந்ததியர் தெருவை சேர்ந்த, சுதாகர் மனைவி கஸ்துாரி, 32. இவர் கடந்த, 29ல், சூரமங்கலத்தில் வழக்-கம்போல் கூலி வேலைக்கு சென்ற நிலையில் மாயமானார். அவ-ரது தாய் சரோஜா புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்-றனர்.
09-Aug-2025